ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ:

ॐ श्री गणेशाय नमः

Aum shri ganeshaya namah! (Om śrī gaṇēśāya namaḥ)

Chanting Ganesha Mantras or name of Lord Ganesha are believed as giving Siddhi (success) to these who chant  with genuine devotion. Each and every mantra of Lord Ganesha is full of energy and powerful. It is true, these mantras ward off us all trials and troubles gracing  with every success. In fact, all mantras are disclosed by God grace, through the intelligence, vision and experience of the divinely illuminated and enlightened sages to us.

கணபதி துணை

நவ சக்தி கணபதி ஆலயம், ஹனோவர்.

ஹனோவர்  நகரில் புதிய விநாயகர் ஆலயம்.

விநாயகப்பெருமான் அடியார்களே!

இப்பூலோகத்திலே மத்திய பகுதியான ஐரோப்பாவில் சகலவளங்களும் உள்ள ஜேர்மனி தேசத்தில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் இந்து தமிழர்களின் இந்துபண்பாட்டு​ ​கலாச்சார​ ​சமய​ ​சமுதாய அடிப்படை​ அ​ம்ச​ங்களை​ ​தமது எதிர்கால சந்ததிக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய பணிகளை, ஒவ்வொரு மனிதனும் தன்னால் ஆன முயற்சிகளை, தனியாகவோ அல்லது பலர் ஒன்று கூடியோ செயற்பட்டு ப​ண்பாடு, கலாச்சாரம் சமயம், மொழி போன்றவற்றை பாடசாலை, மன்றங்கள், ஆலயங்கள் மூலம் வளர்த்தெடுக்கப் பல முயற்சிகள் கடந்த 30​ ​ஆண்டுகளாக​ ​நட​ந்​து​ ​கொண்டிரு​க்​கும்​ ​வேளையில்​ ​ஹனோவர் நகரில் இந்து தர்ம அறநெறிகளை அடிப்படையாக கொண்டு இன்னும் ஓர்​ ​ஆலயம் அமைக்கப்பட வேண்டி தேவையை உணர்ந்து, எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் நவசக்தி கணபதி என்ற திருநாமத்துடனும் நவசக்திகளின் நாயகி அன்னை பராசக்தி நாகபூஷணி அம்பாள் என்னும் திரு நாமத்துடனும், கலியுக வரதனாகிய முருகக் கடவுள் வள்ளி தேவசேனாவுடனும்​ ​மற்றும் நவக்கிரக மூர்த்திகள் இவ் ஆலயத்தில் எழுந்தருள காலம் கைகூடியுள்ளபடியால் அதற்குரிய முயற்சிகள் செய்யப்பட்டு நிறைவடையும்​ ​நிலையில்​ ​
உள்ளதை​ ​மிகவும்​ ​மகிழ்ச்சியுடன்​ ​உ​ங்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். நாம் இந்த ஆன்மிக பணிகளின் அடிப்படையான கும்பாபிஷேகம் எனும் பெரும் சாந்திவைபவத்தை மன்மதவருட சித்திரை மாதத்தில் தேவர்களின் பகல் பொழுதான உத்தராயணத்தில் வசந்த இளவேனில் காலத்தில் செய்ய குருவருளும் திருவருளும் கூடி உள்ளபடியால் பஞ்சாங்க நாட்களின் படியும், இங்குள்ள நடைமுறை வசதிகளின் படியும் நாட்களை நாம் தீர்மானித்துள்ளோம்.

01.05.2015 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு வெள்ளி காலை 9.00​ ​மணி முதல் 13.00 மணி வரையும், மாலை​ ​17.00 மணி முதல் 21.30 மணி வரையும் கிரியைகள் நடைபெறு​ம்.​

வெள்ளிக்கிழமை மாலை 17:00 மணிக்கு விளக்குப்பூஜை​யும், (விளக்குபப்பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் அடியார்கள் முன்கூட்டியே ஆலயத்துடன் தொடர்பு கொள்ளவும்.) அதனைத் தொடர்ந்து விம்பஸ்தாபனம் ஸ்தூபி ஸ்தாபனம் நடைபெறும்.

02.05.2015 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை​ ​18.00 மணி வரையும் எண்ணைக்காப்பு, பால் அபிஷேகமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து விம்பசுத்தி, யாக பூஜையும் நடைபெற்று 21.00 மணியளவில் பூஜைகள் நிறைவுபெறும்.

மறுநாள் 03.05.2015 அன்று காலை 07.30 மணியளவில் பூஜைகள் ஆரம்பிக்க​ப்​பட்டு 09.30 மணி முதல் 10.50 வரையுள்ள சுபமுகூர்த்த சுபவேளையில் எம்பெருமான் விநாயகப்பெருமானுக்கும் ஏனைய​ ​பரிவாரமூர்த்திகளுக்கும்​ ​மஹா கும்பாபி​ஷேகம் நடைபெறும். பின் மஹா அபிஷேகமும் விசேஷ பூஜையும் நடைபெற்று அதனைத் தொடர்ந்து குருமார்கள், மங்களவாத்திய கலைஞர்கள், தொண்டர்கள் கௌரவிப்பு நடைபெற்று விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு, மகேஸ்வர பூஜையும் (அன்னதானம்) வழங்கப்படும்.

இப்புதிய ஆலயத்திற்கு வேண்டிய எல்லாவித உதவிகளையும் பொதுமக்களாகிய நீங்கள் உங்கள் விருப்பப்படி ஆலயத்திற்கு கொடுத்து உதவலாம். ஆலயத்திற்கு வேண்டிய கும்பாபி​ஷேகப் பொருட்கள், அன்னதானப்பொருட்கள், பொருளாதார உதவிகள், சரீர உதவிகள் என்பனவற்றை வழங்கி இந்த கும்பாபிஷேக விழாவை சிறப்படையச் செய்து விநாயகப்பெருமானின் இஷ்டசித்திகளை பெற்று பேரானந்த பெருவாழ்வு வாழ விநாயகப்பெருமானை வேண்டுகின்றோம்.

கும்பாபி​ஷேகத்தைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற இருப்பதனால் இந்த மண்டலாபிஷேகத்தில் உபயம் செய்யும் அடியார்கள் முன் கூட்டியே ஆலயத்துடன் தொடர்புகொள்ளவும். அத்துடன் இந்த ஆலயத்திற்கு வேண்டிய மாதாந்த நிதி உதவிகளையும், சரீர உதவிகளையும், மற்றும் ஏனைய உதவிகளையும் வழங்கி உங்களையும் இந்த இந்துசமய சமுதாய கலாச்சார விடயங்களில் தொடர்ந்து இணைத்து, நாம் இந்த மனிதப்பிறவியில் சமுதாயத்திற்கு என்ன செய்தோம் என்ற வரலாற்றை எமது எதிர்கால சந்ததியினர் பார்க்கும் பொழுது எமது மனிதப்பிறவியின் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

01.05 2015​,​ 02.05 2015​,​ 03.05 2015 ஆகிய தினங்கள் அன்னதானம் வழங்கப்படும்.

“குருவருளும் திருவருளும் பெற்று நலமுடன் வாழ்க”

நவ சக்தி கணபதி ஆலயம், ஹனோவர்

Navashakthi Ganapathy Temple, Alter Flughafen 18, 30179 Hannover.

போக்குவரத்து வசதி:
Kröpcke இல் இருந்து வருபவர்கள் 2ம் நம்பர் Strassenbahn (Richtung Alte Heide) எடுத்து 10 வது தரிப்பிடமான Papenwinkel இல் இறங்கி 3 நிமிடம் நடந்து வந்தால் கோவிலை வந்தடையலாம். மற்றும் Hauptbahnhof இல் இருந்து வருபவர்கள் 2ம் நம்பர் Strassenbahn (Richtung Alte Heide) எடுத்து 9வது தரிப்பிடமான papenwinkel இல் இறங்கி 3 நிமிடம் நடந்து வந்தால் கோவிலை வந்தடையலாம்.

தொடர்புகளுக்கு:
தர்மகர்த்தா + ஆலய ஸ்தாபகர்  சு. கிருபாகர சர்மா தொடர்புகளுக்கு 0511 7590173 அல்லது Handy Nr​.​01747770661

Sri Ganesh Hindu Gemeinde e.V. Hannover Europa-Amtsgericht Hannover – VR 202226

ஸ்ரீ நவ சக்தி கணபதி ஆலய மகா கும்பாபிஷேக விக்ஞாபனம்

  • ஸ்ரீ நவ சக்தி கணபதி (மூலமூர்த்தி)
  • முருகன், வள்ளி, தெய்வானை
  • நாகபூஷணி அம்பாள்
  • நவக்கிரகங்கள்
  • Sri Navashakthi Ganapathy (Main deity)
  • Lord Muruga, Valli, Theivanai
  • Nagapooshani Ampal
  • Navagraha

பத்தாம் திருமுறை

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

பொழிப்புரை

ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.